Tamilசெய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

தபால் நிலையங்களில் இயக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. அதுபோல், வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று அறிவித்தது.

அதன்படி, பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி, 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இருப்பினும், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), கிசான் விகாஸ் பத்திரம் (7.5 சதவீதம்), தேசிய சேமிப்பு திட்டம் (7.7 சதவீதம்), மாதாந்திர வருவாய் திட்டம் (7.4 சதவீதம்) உள்ளிட்ட இதர சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.