Tamilசெய்திகள்

ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி – மத்திய நிதியமைச்சகம் தகவல்

2024-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 219 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தைவிட 10.4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.

ஜனவரி மாத வரி வசூல் இதுவரை வசூலான மாத வரி வசூலில் 2-வது மிகப்பெரிய தொகையாகும். மேலும், இந்த நிதியாண்டில் (2023-2024) 3-வது முறையாக 1.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 2022 ஏப்ரல்- 2023 ஜனவரி வரையில் 14.96 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. தற்போது 2023 ஏப்ரல்- 2024 ஜனவரி வரை 16.69 லட்சம் கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 11.6 சதவீதம் அதிகமாகும்.

ஐஜிஎஸ்டி வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு 43 ஆயிரத்து 552 ரூபாய் கோடியும், மாநிலங்களுக்கு 37 ஆயிரத்து 257 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்து