Tamilசெய்திகள்

ஞானசேகரன் வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது – தமிழக டிஜிபி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில்,” அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 கட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது” என குறிப்பிட்டுள்ளார்.