Tamilசெய்திகள்

டெல்லி மதுபான கொள்கையில் ரூ.100 கோடி ஊழல் – கவிதாவிடம் நடத்திய விசாரணையில் தகவல்

தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.