Tamilசெய்திகள்

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.