தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட இளைஞர் கைது!
சென்னை தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர். ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது