Tamilசெய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைப்பு – RAW முன்னாள் தலைவருக்கு முக்கிய பொறுப்பு

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு மோடி முழு சுதந்திரம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. குழுவின் புதிய தலைவரமாக இந்திய உளவுத்துறையான RAW முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த குழுவில் 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள், 3 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், 1 முன்னாள் IFS அதிகாரி இடம்பெற்றுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கிய பங்காற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.