Tamilசென்னை 360

நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்திய ‘கலர் விஷன் புக்’!

நிப்பான் பெயிண்ட் இந்தியா ( அலங்கார நிறுவனம்) சமீபத்தில் தனது கலர் விஷன் 2024-2025 புத்தகத்தை அறிமுகப்படுத்தியது. கலர் விஷன் என்பது வண்ணங்களில் நிபுணத்துவம் பெற்றவரும், பிரபல வண்ண ஆலோசகருமான (கலர் கன்சல்டண்ட்) டாக்டர்.கெளஸ்தவ் சென் குப்தா, இந்திய தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் அவர்கள் நிப்பான் பெயிண்ட் இந்தியாவுக்காக உருவாக்கிய படைப்பாகும்.

கலர் விஷனின் இரண்டாவது பதிப்பு, முதல் முறையாக, இளைஞர்களுக்கும் வாழ்விட அடிப்படையிலான பிரிவுகளுக்கும் ஏற்ப கலர் பேலட்டுகளை வழங்குகிறது. வண்ணங்கள் மூலம் தேசத்தின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுகிறது. இந்தியா போன்ற ‘வண்ணமயமான’ ஆனால் கலாச்சார ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அதன் உணர்ச்சி, சமூகம் மற்றும் கலாச்சார இருப்பில் நிறம் எப்போதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நிப்பான் பெயிண்ட் கலர் விஷனின் தொலைநோக்கு அமைப்பு, டாக்டர் கெளஸ்தவ் சென் குபதாவின் பதிப்புரிமை பெற்ற முறையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது வண்ணத்தை வரைபடமாக்கும் தனித்துவமான ‘கலர் ஃபோர்சைட் க்யூப்’ (டாக்டர் கெளஸ்தவ் சென்குப்தா, 2018)-ஐ உள்ளடக்கியது. இது சமூகம், கலாச்சாரம், தனிமனித உணர்வுகள் மற்றும் எண்ணங்களை வண்ணங்களோடு தொடரு படுத்தி வெளிக்காட்டும் ஒரு ‘மெட்டா டேக்’ தொழில்நுட்ப முறையாகும். இதன் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் வடக்கு, தெற்கு மற்றும் இளைஞர்கள் என்னும் மூன்று பிரிவுகளில் வடிவங்களை உருவாக்குகிறது. பின்னர் இந்த வடிவங்கள் இந்தப் பிரிவுகளில் உள்ள மக்களின் தற்போதைய ஒட்டுமொத்த ம் மனநிலையைக் குறிக்கும் வண்ணங்களாகத் தொகுக்கப்படுகின்றன.

ஆராய்ச்சியின் மூலம் 12 முக்கிய தொன்மையான பிரிவுகள் கிடக்கப் பெற்றதில், அவற்றில் சில இதோ,

1. ஹீல் – செளகரியமான உனர்வை பிரதிபலிக்கும் சங்கன் ஃபாரஸ்ட், கிளவுட் கிராஸ், டிரைவர்ஸ் பாரடைஸ் மற்றும் சர்க்கஸ் டாப் ஷேடுகள்.

2. ப்ளூமர்ஸ் – விருப்பத்தை வெளிப்படுத்த லீல் ஆஃப் ஃபெயித், ஷாக்கிங் யெல்லோ, பீ மை வேலண்டைன், நாக் அவுட் சிவப்பு ஆகிய ஷேடுகள்.

3. ஹைவ் – கூடி வாழும் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆரஞ்சு சோடா, எலக்ட்ரிசிட்டி, யங் வயலட் மற்றும் கரீபியன் கோஸ்ட் ஷேடுகள்.

4. சோல்கோர் – தனக்குள்ளே தன்னை தேட மேரி கோ ரவுண்ட், சீ ஆஃப் கோரல், பேட்ச்வார்க் மற்றும் டார்கெஸ்ட் ஹவர் போன்ற ஷேடுகள்.

கலர் விஷன் முன்கணிப்புக்கான தனித்துவமான செயல்முறையை உருவாக்க 16 மாதங்களுக்கும் மேல் தேவைப்பட்டது மற்றும் சுமார் 30,000 ‘மெட்டா டேக்’-குகள் பயன்படுத்தப்பட்டன. ஆராய்ச்சியின் போது பல்வேறு நிலைகளில், மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, பாண்டிச்சேரி, பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் இருந்து நிபுணர்கள், வண்ண பயிற்சியாளர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், வண்ண வினையூக்கிகள், டொமைன் ஆகியவற்றின் பல குவிப்புக் குழுக்கள் மூலம் வண்ண குறிப்புகள் செயலாக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய NIFT டாக்டர்.கவுஸ்தவ் சென்குப்தா, “நிப்பான் பெயிண்ட் கலர் விஷனின் இரண்டாவது பதிப்பை வெளியிடுகிறது. இந்தியாவின் தொடக்க மண்டல மற்றும் இளைஞர்களின் வண்ண விருப்பங்களின் முன்னறிவிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது, இதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நிப்பான் பெயிண்ட் கலர் விஷன் என்பது நமது தேசத்தின் செழுமையை வண்ணத்தில் வெளிப்படுத்துவது ஆகும். நிப்பான் பெயிண்ட் குழுவின் தொடர்ச்சியான கூட்டாண்மைக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நிப்பான் பெயிண்ட் இந்தியா ( அலங்கார பிரிவு) எஸ்.மகேஷ் ஆந்த் பேசுகையில், “பல்வேறு மரபுகளையும் கலாச்சாரங்களையும் தனக்குள் உள்ளடக்கிய போதும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற இந்தியா ஒரு பரந்த கேன்வாஸில் பல வண்ணங்களை நெருக்கமாக இணைத்து வரையப்பட்ட ஓர் அழகோவியமாக திகழ்கிறது. பல பகுதிகள் மற்றும் தலைமுறைகளின் எண்ணங்களை வண்ணங்களாக பிரதிபலிக்கும் நிப்பான் பெயிண்ட் இந்தியா கலர் விஷனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வடக்கின் உற்சாகம், தெற்கின் ஆழம் மற்றும் துடிப்பான இளம் பருவத்தின் உணர்வுகள், ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 12 தனித்துவமான தொன்மங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.

நிப்பான் கலர் விஷன் முதன்மையாக வீட்டு வண்ணங்களுக்காக ( உள் மற்றும் வெளிப்புற வீட்டு சுவர்கள், வீட்டு உள்-அலங்காரங்கள், வீட்டு உபகரணங்கள், மேஜைப் பொருட்கள், விளக்குகள் போன்றவை ) உருவாக்கப்பட்டிருந்தாலும் தனிப்பட்ட பொருட்கள், டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிஸ், எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல் போன்ற மற்ற தயாரிப்புப் பிரிவுகளுக்கும் அவை நன்றாகப் பயன்படுத்தப்படலாம்.

பிராண்ட் வாடிக்கையாளர்கள் கவனிக்க மற்றும் பார்க்க ஒரு கலர் விஷன் வலைத்தளத்தை (Color Vision website) நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், கலர் விஷன் டிஜிட்டல் புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளாலாம்.