Tamilசெய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது வெளியில் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் கூறியதாவது:-

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறது. பயங்கரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். அனைத்து பயங்கரவாதிகளையும் எச்சரிக்கிறோம்.

பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.