Tamilசெய்திகள்

போலீஸ் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் கைது

வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.
பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்படி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயத்தமாகினர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளை தடுக்கும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஹரியானா மாநில எல்லை பகுதியில் வைத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.