Tamilசெய்திகள்

மதுபான விற்பனையில் முறைகேடு – மத்திய பிரதேசத்தில் 11 இடங்களில் சோதனை

மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.