Tamilசெய்திகள்

மோட்டார் சைக்கிள்களை வாடமைக்கு விடும் திட்டத்தை தொடங்கிய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார் சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

“உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார் சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார் சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்,” என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.

“ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்,” என்று அவர் மேலும் தெரவித்தார்.