Tamilசெய்திகள்

ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததன் விளைவாக தான் மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் படங்களுக்கு பால் ஊற்றி கொண்டாடினர்.