Tamilசெய்திகள்

ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ. 75,000 வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தவெக அரசு அமைந்தவுடன் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ. 75,000 வரையிலும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கடுமையான நிதிநெருக்கடிக்கு இடையிலும் ரூ. 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர் என முதல்வர் விஜய் உரையாற்றினார்.