வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5 ஆம் தேதி பா.ம.க போராட்டம் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது:
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ந்தேதி போராட்டம் நடத்தப்படும். டிச.5-ந்தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வன்னியருக்கு 15% இட ஒதுக்கீடு கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி டிச.17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்த நிலையில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
