Tamilசெய்திகள்

2024 ஆம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு – 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து

2024-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடைபெற்றது. சி.பி.ஐ., தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டுக்கான 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) இன்று அதிரடியாக உத்தரவிட்டது. விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் நாளை நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.