ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கபத்ரா பாக்சி உத்தரவிட்டார்.
