டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்
டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் பதக், பிம்லேஷ், மகோட்டா, மணீஷ் பதக், அமன் தாக்கூர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
