Tamilசெய்திகள்

5,6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனம்ழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு.
கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 6-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்பு. அதேநேரம் மதியவேளையில் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும்.