ஏஐ ஆலோசனையின்படி எச்.ஐ.வி-க்கு மருந்து உட்கொண்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் பரிசோதனை மூலம் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டார். ஆனால், அவர் மருத்துவரை அணுகாமல், ஏஐ சாட்போட் மூலம் சிகிச்சை முறைகளைத் தேடியுள்ளார். ஏஐ-யின் ஆலோசனையின்படி, அவர் Pre-Exposure Prophylaxis (PrEP) எனப்படும் எச்.ஐ.வி தடுப்பு மருந்துகளை உட்கொண்டார்.
ஆனால் இந்த மருந்துகள் எச்.ஐ.வி தொற்று இல்லாதவர்கள், அத்தொற்று வராமல் தடுக்க உட்கொள்ள வேண்டியவை. ஆனால், ஏற்கனவே தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு இது சரியான சிகிச்சை அல்ல. முறையற்ற அளவில் இந்த மருந்துகளை உட்கொண்டதால், அவருக்கு Stevens-Johnson Syndrome என்ற அரிய தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.
தற்போது அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். AI கருவிகள் பொதுவான தகவல்களை வழங்க முடியுமே தவிர, மருத்துவ ஆலோசனைகளுக்கு ஒருபோதும் AI-யை நம்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
