Tamilசெய்திகள்

சென்னையில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.

அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.