Tamilசெய்திகள்

விமான பயணிகளின் புகார்கள் மீதான நடவடிக்கை! – மத்திய அரசு புதிய அறிவிப்பு

இந்தியாவில் விமான பயணங்கள் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் பல்வேறு குறைகளும் அதிகரித்து வருகிறது. அதில் முக்கியமானது குடும்பத்துடன் விமானத்தில் பயணித்தாலும் ஒரே இடத்தில் குடும்பத்தினர் அமர முடியாமல், வெவ்வேறு இருக்கைகளில் அமர வேண்டிய நிலை. அதற்கு காரணம், ஒரே குடிம்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர வேண்டும் என்றால் கூட, சீட் செலக்‌ஷன் கட்டணம் (Seat Selection Charge)செலுத்த வேண்டும்.

மேலும், இதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டு வந்ததால் இது தொடர்பாக விமான பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். தற்போது இந்த புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீதம் இருக்கைகள் இலவசமாக வழங்கப்பர்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் DGCA புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகள் இல்வசமாக வழங்கப்பட வேண்டும். ஒரே PNR Booking மூலம் பயணம் செய்யும் குடும்பத்தினர் அல்லது குழுவினர் ஒன்றாக, அருகருகே அமர வைக்கப்பட வேண்டும், என்று தெரிவித்துள்ளது.