X

அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலமாக உள்ளது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை. இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது. அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்