துபாயில் உள்ள அமெரிக்க ராணுவ மறைவிடங்கள் மீது தாக்குதல்! – பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவிப்பு
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் ’ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா’ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பச்காரி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய இடங்களுக்குத் தப்பியோடி ஒளிந்திருந்தனர். முதல் மறைவிடத்தில் 400 வீரர்களும், இரண்டாவது மறைவிடத்தில் 100 வீரர்களும் என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர்.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இந்த இடங்களைக் கண்டைறிந்து துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் , இதில் அமெரிக்கத் தரப்பில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிபர் டிரம்பும், அமெரிக்க ராணுவத் தளபதிகளும் இந்தியப் பிராந்தியம் அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டியாக மாறும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமிய வீரர்களின் தெயுவீக விருப்பத்திற்கு அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
