எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் நிலையங்கள் மீது தாக்குதல் – அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் இன்றுடன் 23 வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், பல நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமூக வலைதளத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி முழுமையாகத் திறந்து விடாவிட்டால், அந்த நாட்டின் பல்வேறு மின் நிலையங்களைத் தாக்கி அழிப்போம். இதில், மிகப்பெரிய மின் நிலையமே முதலாவதாகத் தாக்கப்படும், என்று மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி அளித்துள்ள ஈரான், ஈரானின் எரிசக்தி அல்லது மின்சார உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட வணிக கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்படும், என்று எச்சரித்துள்ளது.
