Tamilசெய்திகள்

மேலும் 300 சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை முடக்கிய மத்திய அரசு

மத்திய அரசு சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான மேலும் 300 இணையதளங்கள் மற்றும் செயலிகளை (Apps) அதிரடியாக முடக்கி தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட இதுபோன்ற சட்டவிரோத தளங்களின் மொத்த எண்ணிக்கை 8,400 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் இத்தகைய சூதாட்ட வலைதளங்களால் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதையும், சமூகச் சீர்கேடுகள் உருவாவதையும் கருத்தில் கொண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் பல தளங்கள் இந்திய சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், நாட்டின் பாதுகாப்பைக் கருதியும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.