Tamilசெய்திகள்

வைகை எஸ்க்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12635) குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான வேகத்தைவிட மெதுவாக இயக்கப்படும்.

அதன்படி, இந்த ரயில்கள் வருகிற 16-ந் தேதி 1.10 மணி நேரம் தாமதமாகவும், 18, 20 ஆகிய தேதிகளில் 1.15 மணி நேரம் தாமதமாகவும், 29-ந் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும் மதுரை சென்றடையும். அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.20 மணிக்கு சாய்நகர் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22601) வருகிற 22-ந் தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.