X

மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்களுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.

போதைப் பொருட்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு, மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியேற்றனர்.