கொசுக்களை பறக்கும் தடுப்பூசிகளாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த சீனா!
சீன விஞ்ஞானிகள் கொசுக்களையே ‘பறக்கும் தடுப்பூசிகளாக’ (Flying Vaccines) மாற்றும் அதிரடியான ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தக் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, அவற்றின் உமிழ்நீர் மூலம் நோய்த்தடுப்பு மருந்துகளை உடலுக்குள் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஊசி மூலம் தடுப்பூசி போடும் சிரமத்தைக் குறைத்து, மிகப்பெரிய மக்கள் தொகைக்குக் குறுகிய காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், மக்களின் அனுமதி பெறாமல் கொசுக்கள் மூலம் மருந்துகளைச் செலுத்துவது எவ்வளவு தூரம் அறநெறிக்கு உட்பட்டது (Ethics) மற்றும் இது சூழலியலில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்களும் அறிவியல் உலகில் தற்போது எழுந்துள்ளன.
