Tamilசெய்திகள்

மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு!

மேற்குவங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி தற்போது தனியாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.