Tamilசெய்திகள்

பீகாரில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி கட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் பீகார் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி உள்பட கட்சியின் அனைத்து உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் மாநில முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். பீகார் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கூட்டணியில் நிலவும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தேர்தலில் கட்சியினர் தீவிர பணியாற்றுமாறு வலியுறுத்தப்படும்.

வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம், பா.ஜ.க. புகாருக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். வாக்கு திருட்டு பிரச்சனையை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். ராகுல்காந்தி சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார். இது கட்சியினர் இடையே உற்சாகத்தை அளித்தது.

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்ராம், ஷகீல் அகமது கான் உள்ளிட்ட 38 உறுப்பினர்கள் அந்த குழுவில் இடம்பெறுகிறார்கள். மேலும் பீகாரை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் இந்த குழுவில் நிரந்தர அழைப்பாளராக இருப்பார்கள்.