திமுக அரசு ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் மூழ்கியுள்ளது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கு
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆளும் திமுக அரசு ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் மூழ்கியுள்ளதாகக் கடுமையாகச் தாக்கி பேசினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், காவல்துறை மூலம் மக்களை அச்சுறுத்தும் போக்கை திமுக கையாளுவதாகவும் விமர்சித்தார்.
ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள திமுக, மத்திய அரசின் நலத்திட்டங்களைத் தமிழக மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்காமல் முட்டுக்கட்டைப் போடுவதாகக் குறிப்பிட்ட அவர், மணல் மற்றும் மது மாஃபியாக்களின் கூடாரமாக மாநிலம் மாறியிருப்பதாகக் கூறி வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
