தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் தொடர் குற்றச் சம்பவங்கள் குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பகல் பொழுதில் நடந்த கொலை, மதுரையில் சிறுவன் சடலமாக மீட்பு மற்றும் செஞ்சி சிறுமி மாயமானது போன்ற தொடர் சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் குற்றவாளிகள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு குறித்தும், தொடரும் கொலைச் சம்பவங்கள் குறித்தும் முதல்வர் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசின் இந்தச் செயலற்ற தன்மையைக் கண்டித்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.