ஆளுக்கு இரண்டரை மாதம் முதல்வராக இருக்கலாம்! – விஜயிடம் நடந்த பேரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடிக்கி விட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, த.வெ.க அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் இணையப் போவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மெலும், சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், திரும்பியதும் மகிழ்ச்சியாக வந்ததால், கூட்டணி தொடர்பான யூகங்கள் அதிகரிக்க தொடங்கியது. ஆனால், த.வெ.க ஆலோசனை கூட்டத்தில் யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டியிடப்போவதாக விஜய் அறிவித்ததாக சொல்லப்பட்டது. மேலும், த.வெ.க நிர்வாகிகள் சிலரும் கூட்டணி இல்லை, என்று விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், கூட்டணிக்காக விஜயிடம் பல பேரங்கள் பேசப்பட்டதாக த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். கொளத்தூரில் நேற்று நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “த.வெ.க 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெக தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்து விட்டார். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்.” என்று தெரிவித்தார்.
