X

தமிழகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை குறித்து கேட்ட கேள்விக்கு,

தமிழகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்த கூட முதலமைச்சர் தயாராக இல்லை என்றார்.

இதையடுத்து, பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற போவதாக வெளியான செய்தி குறித்து கேட்ட கேள்விக்கு, தி.மு.க.விற்கு ஆதரவாக வடமாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். எத்தனை லட்சம் பேரை சேர்த்தாலும் தி.மு.க. ஆட்சி மாற்றப்படுவது உறுதி என்றார்.