Tamilசெய்திகள்

ஆர்.கே.நகரில் 365 வீரர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டி!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதியில் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன.

புதுவண்ணாரப்பேட்டை (MPT) பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். இன்று காலை போட்டியைத் தொடங்கி வைத்த அவர், சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்ட வேண்டும் என்று வீரர்களை ஊக்கப்படுத்தினார். இப்போட்டியில் மொத்தம் 45 அணிகளைச் சேர்ந்த 365 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வெற்றி கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் காலை சிற்றுண்டி – மதிய உணவுகள் வழங்கப்பட்டது.

போட்டியின் இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு போட்டியை காண வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.வினோத்குமார், சந்தனசிவா, ஆர்.நித்தியானந்தம், நேதாஜி கணேசன், எம்.ஏ.சேவியர், நாகரத்தினம்ரவிராஜன், ஐயப்பா எஸ்.வெங்கடேசன், ஏ.கணேசன், ஜெஸ்டின் பிரேம்குமார், அ.செல்வராஜ், பவழன், லயன் ஈ.சண்முகவினாயகம், முகேஷ், மற்றும் வி.எஸ்.புருஷோத்தமன், மாலா, எல் எஸ். மகேஷ்குமார், கே.பி.கர்ணன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, பி. கோவிந்தராஜ், மரக்கடை விஜி, இரா.முரளிமுருகன், ஏ. இளவரசன், இஎம்எஸ். நிர்மல் குமார், டி.பிரபாகரன், புலிமுருகன் பிரின்ஸ் எஸ்.ஏ.சுரேஷ், தங்கதுரை, மதன்மோகன், கார்த்திக், சி.எஸ். இம்மானுவேல், மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.