தூத்துக்குடியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!
தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் ஏற்பாட்டில் பிரையன்ட் நகர் காமராஜர் மண்டபத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி இணைந்து மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மக்கள் பயனடைந்தனர். மேலும் இந்த முகாமில் கண் பரிசோதனையில், கண் பொறை ஆபரேஷன் இலவசமாக செய்யப்பட்டதோடு, இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. பொது மருத்துவத்தில் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்னை ஜூவல்லர்ஸ் உதவி இயக்குனர் விக்னேஷ் விநாயகமூர்த்தி மக்கள் செய்தி தொடர்பாளர்கள் ரவிக்குமார் மாரிக்கனி, அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளர் கந்தசாமி, அமெரிக்கன் ஆஸ்பத்திரி முகாம் அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அன்னை ஜுவல்லர்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
