Tamilசெய்திகள்

தொடர் சரிவில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை நேற்று குறைந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்ற மன ரீதியில் உள்ளனர்.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 174 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.