தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு – ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் 2 ஆவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.85,120 ஆக விற்பனையாகிறது. காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது.
