தங்கம் விலை இன்று இரண்டு முறை குறைந்தது! – சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி ரூ.2.65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.11,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலை ரூ.3200 குறைந்து ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
