உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுகு தடை – விதிமுறைகளை பிறப்பித்த அரசு
சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.
அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
