Tamilசெய்திகள்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு!

வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில், அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றிருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் விழா அரங்கில் ஒருகணம் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ட்ரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோரை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் முக்கியத் தலைவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகமே உற்றுநோக்கும் இந்த உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதுடன், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.