தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மாநில அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.