Tamilசெய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் – கமல்ஹாசன்

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். என்.டி.ஏ. ஏற்கனவே சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி, ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளரான நிறுத்தியுள்ளது. இதனால் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து கமல்ஹாசன் எம்.பி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கமல்ஹாசன், “இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். எனவே, அவரது சொல்படியே செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன், சமீபத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.