பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தால் கேரளவுக்கு அதிக நிதி கிடைக்கும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
பினராய் விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அது புரட்சிக்கரமான நடவடிக்கையாக இருக்கும். அதன்மூலம் நிச்சயமாக கேரளா மாநிலத்திற்கு அதிக நிதி வரும். இந்த நிதியை கொண்டு கேரளா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு மேலும் பெரிய பேக்கேஜ் கொடுப்பார். பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். அதன்மூலம் மீண்டும் அவர் முதலமைச்சராக முடியும். சோசலிச தலைவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியும் என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் இணைய முடியாது?.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
