தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அவர்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த அரசியல் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக, சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் கதவுகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக நிறுவப்பட்டுள்ளன. அவரது இல்லத்திற்கு வரும் அனைவருமே தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தவெகவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருவதால், அப்பகுதியில் காவல்துறையினர் உச்சகட்டப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஜய்யின் அரசியல் எழுச்சி மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்டு வரும் இந்த உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது.