2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. மதியம் 1 க்மணி நிலவரப்படி, த.வெ.க சுமார் 104 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பான சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட த.வெ.க வெற்றி உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு நடிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.