Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் – சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செலின் அபார சதத்தால் 286 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முதல் பந்தில் பவுண்டரி அடித்து 1750 ரன்கள் சாதனையைக் கடந்தார். இவர் 1773 ரன்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.