Tamilசெய்திகள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் (NTK) தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 19) சென்னையில் வெளியிட்டார். இதில் முக்கியமாக, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றம், தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம், நீர்வளப் பெருக்கம், தூய குடிநீர் இலவசம் மற்றும் அனைவருக்கும் தரமான மருத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலன், பெண்ணுரிமை மற்றும் புதிய போக்குவரத்து கொள்கை எனப் பல முற்போக்கான அம்சங்கள் இந்த 2026 தேர்தல் வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளுடன் மோதுவதற்குத் தயாராகி வரும் சூழலில், சீமானின் இந்த அதிரடி வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.