Tamilசெய்திகள்

வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

* வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்.

* தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

* பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.

* திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.